வேகமாக எடை குறைய... பப்பாளியை இப்படி சாப்பிடுங்க!

By Kanimozhi Pannerselvam
23 Oct 2024, 12:50 IST

பப்பாளி குறைந்த கலோரி மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. மேலும் இது செரிமானத்தை மேம்படுத்தவும், நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும், இயற்கையான முறையில் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. எடை மேலாண்மைக்கு இதை உட்கொள்வதற்கான எளிய வழிகள் இதோ...

பப்பாளி எடையிழப்புக்கு உதவுமா?

உங்கள் தினசரி உணவில் பப்பாளியை சேர்த்துக்கொள்வது, செரிமானத்தை அதிகரிப்பதன் மூலமும், பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், குறைந்த கலோரி, ஊட்டச்சத்து நிறைந்த வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும்.

காலை சிற்றுண்டியாக

பப்பாளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் இயற்கை என்சைம்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுதோடு, நாள் முழுவதும் வேகமாக கொழுப்பை எரிக்கிறது. எனவே உங்கள் நாளை ஒரு கிண்ணம் பப்பாளி பழத்துடன் தொடங்குங்கள்.

பப்பாளி ஸ்மூத்தி

பப்பாளி பழத்தை தண்ணீர் அல்லது பாதாம் பாலுடன் கலந்து காலை உணவு ஸ்மூத்தியாக எடுத்துக் கொள்ளலாம். இத்துடன் சியா அல்லது ஆளிவிதைகளைச் சேர்ப்பது கூடுதல் நார்ச்சத்திற்கும், பசியைத் தடுக்கவும் உதவுகிறது.

மதிய உணவிற்கு பப்பாளி

சாலட் பப்பாளி துண்டுகளை கீரைகள், வெள்ளரிக்காய் மற்றும் ஒரு எலுமிச்சை சாறுடன் கலந்து ஒரு லேசான, குறைந்த கலோரி சாலட்டாக எடுத்துக்கொள்ளலாம். இந்த நார்ச்சத்து நிறைந்த கலவையானது தேவையற்ற கலோரிகளைச் சேர்க்காமல் உங்களை முழுமையாகவும் திருப்தியாகவும் வைத்திருக்கும்.

பப்பாளி + புதினா ஜூஸ்

புத்துணர்ச்சியூட்டும் டிடாக்ஸ் பானத்திற்கு ப்ரெஷான புதினா இலைகளுடன் பப்பாளியைக் கலந்து ஜூஸ் தயாரிக்கலாம். பப்பாளி சாறு செரிமான அமைப்பை சுத்தப்படுத்துகிறது. புதினா செரிமான அமைப்பை குளிர்விக்கிறது.

ஈவ்னிங் ஸ்நாக்ஸ்

சிப்ஸ் அல்லது இனிப்புகளுக்குப் பதிலாக, பப்பாளியை உங்கள் மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். இது பசியை மட்டுமல்லாது, தேவையில்லாத ஜங்க் ஃபுட் ஆசையையும் கட்டுப்படுத்தும்.

அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து

எடை இழப்புக்கு பப்பாளி சிறந்தது என்றாலும், அளவாக சாப்பிடுவதே நல்லது. அதிகமாக உட்கொள்வது இன்னும் அதிக கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும், எனவே தினமும் ஒரு கப் நறுக்கிய பப்பாளியை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.