வெயிட்டை கிடுகிடுவென குறைக்க... வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க!

By Kanimozhi Pannerselvam
05 Feb 2024, 20:03 IST

ஊறவைத்த வெந்தயம்

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

வெந்தய தேநீர்

வெந்நீரில் வெந்தய விதைகளை போட்டு கொதிக்க வைத்தால் வெந்தய தேநீர் தயார். வெந்தயத்தை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள இது ஒரு இனிமையான மற்றும் பயனுள்ள வழியாகும்.

முளைக்கட்டி வெந்தயம்

வெந்தயத்தை முளைக்கட்டி உண்பதன் மூலம் அவற்றின் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்க முடியும். இந்த முளைகளை சாலட்களில் சேர்க்கலாம் அல்லது சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.

அரைத்த வெந்தயப் பொடி

வெந்தயத்தை நன்றாகப் பொடியாக அரைத்து, சூப்கள், குழம்புகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகளில் சேர்க்கலாம்.

டீடாக்ஸ் பானம்

இரவு முழுவதும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை, காலையில் சூடுபடுத்தி வடிக்கட்டி பருகினால் கொழுப்பை விரைவாக கரைக்கும். மேலும் இது வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கக்கூடிய டீடாக்ஸ் பானமாகவும் பயன்படுகிறது.