இன்றைய மோசமான உணவுமுறை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடல் எடை அதிகரிப்பும் ஒன்று. உடல் எடை அதிகரிப்பைக் குறைக்க சில இயற்கை வைத்தியங்களைக் கையாளலாம்
பெருஞ்சீரக விதைகள்
பெருஞ்சீரக விதைகளை உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், பசியைக் குறைக்கவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதை நம் அன்றாட உணவில் பல்வேறு வழிகள் சேர்க்கலாம்
பெருஞ்சீரக நீர்
ஒரு நாளைக்கு இரு முறை பெருஞ்சீரக தண்ணீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதற்கு விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையிலும் மாலையிலும் ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்வது செரிமான மேம்பாடு மற்றும் கொழுப்பு குறைய உதவுகிறது
வறுத்த சீரக விதைகள்
ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை குறைந்த வெப்பத்தில் வறுத்து, உணவுக்குப் பிறகு லேசான, இனிப்பு சிற்றுண்டியுடன் சேர்த்து உட்கொள்வது செரிமானத்தை ஆதரிப்பதற்கும், பசியைக் குறைப்பதற்கும் உதவுகிறது
பெருஞ்சீரக பொடி
ஒரு கைப்பிடி பெருஞ்சீரக விதைகளை நன்கு பொடியாக அரைக்க வேண்டும். கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற இதை வேகவைத்த பொருள்களுடன் சேர்க்கலாம்
பெருஞ்சீரக டீ
ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை கொதிக்கும் நீரில் சேர்த்து டீ தயார் செய்யலாம். இனிப்புக்கு தேன் சிறிதளவு சேர்க்கலாம். இந்த நறுமண டீயை தினமும் அருந்துவது எடையைக் குறைக்க உதவுகிறது