நடைபயிற்சி ஒரு எளிய உடற்பயிற்சியாக மட்டுமல்லாமல், எடையிழப்பு பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், உடல் எடை குறைய எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
எத்தனை படிகள்?
ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடப்பது எடை இழப்பு பயணத்தில் ஒரு சக்திவாய்ந்த தேர்வாக அமைகிறது. இது கலோரிகளை எரிக்க உதவுவதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது
எவ்வாறு வேலை செய்கிறது?
நடைபயிற்சி இதயத்துடிப்பை அதிகரிக்க மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஒரு விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொள்வது கொழுப்பைக் குறைப்பதுடன், மையத்தை பலப்படுத்தவும், மெலிதான இடுப்புக்கு வழிவகுக்கவும் உதவுகிறது
எப்படி செய்வது?
உடல் எடை குறைய விரும்புபவர்கள் குறிப்பாக, சாப்பிட்ட பிறகு நடப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். பெரும்பாலும், வாகனங்களுக்குப் பதிலாக நடந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்
ஆரோக்கியமான உணவுமுறை
நடைபயிற்சியுடன் சீரான சமச்சீர் உணவுகளைக் கையாள்வதன் மூலம் எடையிழப்புக்கு சிறந்த முடிவுகளைப் பெறலாம். மேலும், கொழுப்பு இழப்பை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள், மெல்லிய புரதங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்
குறிப்பு
சிலர் தொடக்கத்திலேயே 10,000 படிகள் ஏற ஆரம்பித்து விடுவர். எனினும், இதை கடினமாக உணர்பவர்கள் சிறிய இலக்குகளுடன் தொடங்கி படிப்படியாக அதிகரிக்கலாம்