மடமடனு எடை குறைய கிவி ஃபுரூட் ஒன்னு போதும்

By Gowthami Subramani
19 Nov 2024, 18:08 IST

கிவி பழம் சுவையுடன் கூடிய பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வது முழுமையான உணர்வை அளிப்பதுடன் கலோரிகளை மிகவும் திறம்பட எரிக்க அனுமதிக்கிறது. எடை குறைய கிவி எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த

கிவி குறைந்த கலோரி உள்ளடக்கம் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளதாகும். இதில் வைட்டமின் சி, கே, பொட்டாசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

நார்ச்சத்துக்கள் நிறைந்த

இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் அதிகளவில் உள்ளது. இவை முழுமை உணர்வை அளித்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவ்வாறு எடையிழப்பை ஆதரிக்கிறது

நீரேற்றத்தைத் தருவதற்கு

கிவி பழம் அதிக நீர் உள்ளடக்கம் நிறைந்ததாகும். சரியான நீரேற்றத்தின் மூலம் உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றலாம். மேலும் இது ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவுகிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

எப்படி உட்கொள்ளலாம்?

உடல் எடையிழப்பை ஆதரிப்பதற்கு, அன்றாட உணவில் கிவி பழத்தைப் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்

கிவி ஸ்மூத்தி

பெர்ரி, வாழைப்பழ ஸ்மூத்திகளில் கிவி பழத்தை சேர்க்கலாம். இதை நாளின் தொடக்கத்தில் அல்லது உடற்பயிற்சிக்குப் பிந்தைய சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்

கிவி சாலட்

சாலட்களில் கிவி பழத்துண்டுகளைச் சேர்ப்பது சுவையை அதிகரிக்கவும், ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் அமைகிறது

கிவி தண்ணீர்

கிவி துண்டுகள், எலுமிச்சை மற்றும் புதினா இலைகளுடன் தண்ணீரை உட்செலுத்தி, கிவி தண்ணீரை அருந்தலாம். இது நாள் முழுவதும் நீரேற்றமாக வைக்கவும், புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் அமைகிறது