ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள அசிட்டிக் அமிலம் பசியைக் குறைத்து உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது
செரிமான ஆரோக்கியத்திற்கு
ஆப்பிள் சைடர் வினிகர் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்ததுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. மேலும், ஊட்டச்சத்து உறிஞ்சுவதை மேம்படுத்தி, உடல் எடையிழப்புக்கு பங்களிக்கிறது
வளர்சிதை மாற்ற மேம்பாட்டிற்கு
தினசரி வழக்கத்தில் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்ப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது உடல் நிறைய கலோரிகளை எரிக்கவும், விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
கொலஸ்ட்ராலை குறைக்க
வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. மேலும், இது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் விரைவான எடை இழப்புக்கு வழிவகுக்கலாம்
பசியைக் கட்டுப்படுத்த
ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் கலோரி உட்கொள்ளலைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது
எப்படி குடிப்பது?
ஆப்பிள் சைடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. பயனுள்ள முடிவுகளைப் பெற, 1 முதல் 2 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து, தொடர்ந்து குடிப்பது நன்மை பயக்கும்