ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பது சவாலான ஒன்றாகும். இதில் உடல் எடை அதிகரிக்க சுவையான மற்றும் சத்தான ஸ்மூத்திஸ் வகைகளைக் காணலாம்
அவகேடோ & பாதாம் ஸ்மூத்தி
வெண்ணெய் பழம் மற்றும் பாதாம் இரண்டுமே அதிகளவிலான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கலோரிகளைக் கொண்டுள்ளது. இது ஸ்மூத்தியை சுவையாகவும், ஊட்டமளிப்பதாகவும் மாற்றுகிறது
மாம்பழ தேங்காய் ஸ்மூத்தி
புதிய மாம்பழம், தேங்காய் பால் மற்றும் ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடர் போன்றவற்றைக் கொண்டு இந்த ஸ்மூத்தி தயார் செய்யப்படுகிறது. இது உணவில் கூடுதல் கலோரிகளைச் சேர்க்க ஒரு சுவையான வழியாக அமைகிறது
வாழைப்பழம் பீனட் பட்டர் ஸ்மூத்தி
வாழைப்பழங்கள், பீனட் பட்டர், பால் மற்றும் ஓட்ஸ் போன்றவற்றின் கலவையானது சரியான கலோரி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது
பெர்ரி & கிரீக் தயிர் ஸ்மூத்தி
இது புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். இந்த ஸ்மூத்தியானது கலப்பு பெர்ரி, கிரேக்க யோகர்ட் மற்றும் தேன் போன்றவை சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம் சத்தான கலோரியை அதிகரிக்கிறது
சாக்லேட் ஓட் ஸ்மூத்தி
பால், கோகோ பவுடர், ஓட்ஸ், ஒரு வாழைப்பழம் போன்றவற்றை இணைத்து ஸ்மூத்தியாக செய்யலாம். இது ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது