புல்லட் வேகத்தில் எடையைக் குறைக்க இத சாப்பிடுங்க

By Gowthami Subramani
04 Oct 2024, 08:52 IST

உடல் எடையிழப்புக்கு புரதம் நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. புரத உணவுகள் முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கிறது. இதில் எடையைக் குறைக்க உதவும் உயர் புரத உணவுகள் சிலவற்றைக் காணலாம்

கீரை வகைகள்

கீரையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது அதிகளவிலான கலோரிகள் மற்றும் அதிக நீர் உள்ளடக்கத்தைக் கொண்டதால் எடையிழப்புக்கு சிறந்ததாகும்

ப்ரோக்கோலி

100 கிராம் அளவிலான ப்ரோக்கோலியில் 2.8 கிராம் புரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த ப்ரோக்கோலியில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இது முழுமையாக உணரவைப்பதுடன், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது

காலிஃபிளவர்

காலிஃபிளவர் உட்கொள்வது உடலில் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் நார்ச்சத்துக்கள் முழுமையாக உணர வைப்பதுடன், பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

பச்சை பட்டாணி

ஒரு கப் வேகவைத்த பச்சை பட்டாணியில் 8.5 கிராம் புரதங்கள் உள்ளது. கூடுதலாக, இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை முழுமை உணர்வை அளித்து பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது

காளான்கள்

இதில் குறைந்த கலோரிகள் இருப்பினும், அதிக புரதங்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. எனவே இவை எடையிழப்பை ஊக்குவிக்கவும், இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது

ஸ்வீட் கார்ன்

100 கிராம் அளவிலான ஸ்வீட் கார்னில் 3.3 கிராம் புரதங்கள் உள்ளது. இது நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இது எடையிழப்புக்கும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது