உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க பலரும் சைவ உணவுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் எடை குறைய உயர் புரத உணவு முக்கியமானது. புரோட்டீன்கள் தசை வளர்ச்சிக்கும், நீண்ட நேரம் முழுமையாக வைக்கவும் மற்றும் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது
எடையிழப்புப் பயணத்தில் பல்வேறு வகையான உயர் புரத உணவுகள் உதவுகிறது. இதில் எடையிழப்பை ஆதரிக்க உதவும் அதிக புரதம் நிறைந்த உணவுகளைக் காணலாம்
பருப்பு
இது புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியதாகும். இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இவை முழுமையாக வைக்க உதவுகிறது. இது எடையிழப்புக்கு சரியான தேர்வாகும்
கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை பசியைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இதை சாலட்களில் சேர்க்கலாம்
டோஃபு
இது புரதத்தின் சிறந்த மூலமாகும். மேலும், இது குறைந்தளவிலான கொழுப்பைக் கொண்டுள்ளது. இதை சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது ஸ்டிர்-ஃப்ரைஸில் சேர்க்கலாம்
குயினோவா
இந்த பல்துறை தானியமானது அனைத்து ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட ஒரு முழுமையான புரதத்தைக் கொண்டதாகும். இது பாஸ்தா அல்லது அரிசிக்கு சிறந்த மாற்றாகும்
சோயாபீன்ஸ்
இது ஒரு சிறந்த புரதச்சத்து நிறைந்த சிற்றுண்டியாகும். இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை தொப்பை கொழுப்பைக் குறைக்க ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது