புரோட்டீன் நிறைந்த உணவுகள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதில் எடையிழப்புக்கு உதவும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் காணலாம்
பருப்பு
நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் பருப்பு வகைகள் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்துவதுடன், எடையிழப்புக்கு உதவுகிறது
முட்டை
முட்டைகள் உயர்தர புரதங்கள் நிறைந்த வளமான மூலமாகும். இதில் உள்ள ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், வயிறு நிரம்பிய உணர்வையும் தருவதுடன், எடையிழப்புக்கு வழிவகுக்கிறது
கொண்டைக்கடலை
இது புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்ததாகும். இவை முழுமையான உணர்வை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது கலோரி உட்கொள்ளலைக் குறைத்து, எடை இழப்புக்கு உதவுகிறது
கடல் உணவு
கடல் உணவு வகைகளில் மெலிந்த புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை பசியைக் குறைக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடை மேலாண்மைக்கு பங்களிக்கிறது
டோஃபு
இது சோயா விதையிலிருந்து தயாரிக்கப்படும் தயிராகும். இது பனீரைப் போன்றே அதிகளவு புரதங்களைக் கொண்டுள்ளது. இவை பசியைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது