தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தும் சில பானங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதில் காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் சிலவற்றைக் காணலாம்
வெந்தய நீர்
ஊறவைத்த வெந்தயம் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள சபோனின்கள், நார்ச்சத்துக்கள் போன்றவை எடையிழப்புக்குக் காரணமாகிறது
இலவங்கப்பட்டை நீர்
இலவங்கப்பட்டை ஆரோக்கியமான மசாலாப் பொருள்களில் ஒன்றாகும். இவை உள்ளுறுப்புக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே உடல் எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்தலாம்
கருப்பு காபி
பால் அல்லது சர்க்கரை இல்லாத கருப்பு காபி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நாள் முழுவதும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது
எலுமிச்சை தண்ணீர்
காலையில் எலுமிச்சை நீர் அருந்துவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. கூடுதலாக இதில் சுவைக்காக தேன் அல்லது பிற பொருள்களைச் சேர்க்கலாம்
இஞ்சி தேநீர்
இஞ்சி டீயில் நிறைந்துள்ள ஆரோக்கியமான பண்புகள் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. குறிப்பாக இதை எலுமிச்சையுடன் இணைப்பது கூடுதல் நன்மைகளைத் தரும்
சீரக தேநீர்
சீரகம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவும் நொதிகளை சுரக்கிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி எடையிழப்பை ஊக்குவிக்கிறது
ஆம்லா சாறு
காலை நேரத்தில் ஆம்லா சாறு அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இவ்வாறு உடல் எடையிழப்பில் பங்கு வகிக்கிறது
கிரீன் டீ
உடல் எடையை குறைக்க கிரீன் டீ குடிப்பவர்கள் உடற்பயிற்சிக்கு பிறகு கிரீன் டீ எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல பலன் பெறலாம். அதன் படி, ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் கிரீன் டீ போதுமானதாகும்