மடமடனு எடை குறையணுமா? காலையில் இதை சாப்பிடுங்க

By Gowthami Subramani
03 Mar 2025, 18:10 IST

உடல் எடையைக் குறைப்பதில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை செரிமானத்தை ஆதரிக்கவும், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதாகவும் அமைகிறது. இதில் உடல் எடை குறைய அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகள் சிலவற்றைக் காணலாம்

சியா புட்டிங்

சியா விதைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் புட்டிங், ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி அல்லது காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது கிரீமி மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த சியா புட்டிங்கை, பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்

அவகேடோ டோஸ்ட்

முழு தானிய ரொட்டியை மேலே பிசைந்த அவகேடோ பழத்துடன் சேர்த்து உட்கொள்வது நார்ச்சத்துக்களைப் பெறுவதற்கான ஒரு சுவையான வழியாகும். அவகேடோ பழத்தில் நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளது. இது நாள் முழுவதும் நிறைவாக வைத்திருக்கிறது. இதில் தக்காளி, முட்டை அல்லது சிறிது விதைகள் போன்றவற்றைச் சேர்க்கலாம்

இரவு ஓட்ஸ்

இது ஓட்ஸை பாலில் அல்லது பால் சேர்க்காத மாற்றுப் பொருளில் இரவு முழுவதும் ஊறவைத்து தயாரிக்கப்படுவதாகும். இதில் கூடுதலாக நார்ச்சத்து அதிகரிக்க ஆளி விதைகள், சியா விதைகள் அல்லது நட்ஸ் சேர்க்கலாம். மேலும் பழங்கள், நட்ஸ் மற்றும் தேன் போன்ற இனிப்புகளையும் சேர்க்க வேண்டும்

முட்டை, காய்கறிகளுடன் குயினோவா

குயினோவா என்பது அதிக நார்ச்சத்துள்ள, பசையம் இல்லாத தானியமாகும். இது முட்டை துருவல், கீரை, காளான்கள், குடை மிளகாய் போன்ற வதக்கிய காய்கறிகளைக் கொண்ட கலவையாகும். இதில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது

பழம் மற்றும் தயிர் ஸ்மூத்தி

பெர்ரி, ஆப்பிள் அல்லது வாழைப்பழங்களை, கிரேக்க தயிர் அல்லது பால் அல்லாத மாற்றுடன் சேர்க்க வேண்டும். பழங்களில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் தயிரில் புரதம் நிறைந்துள்ளது. கூடுதல் நன்மைக்காக சில கீரை அல்லது சியா விதைகளையும் சேர்க்கலாம்