உடல் எடையை சட்டென குறைக்க...ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி தேவை தெரியுமா?
By Kanimozhi Pannerselvam
27 Jan 2024, 20:24 IST
யாருக்கு எவ்வளவு கலோரி வேண்டும்?
ஆண் மற்றும் பெண்கள் உடல் அமைப்பு வேறுபட்டது. எனவே நிபுணர்களின் கூற்றுப்படி ஆண், பெண் எவ்வளவு கலோரிகளை தினந்தோறும் உட்கொள்ள வேண்டும் என்பது அவர்களாது உடல் அமைப்பை பொறுத்து மாறுபடும்.
பெண்களின் கலோரி அளவு
பெண்கள் ஒரு நாளைக்கு சுமார் 1800 முதல் 2400 கலோரிகளை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு சுமார் 1800 முதல் 2200 கலோரிகளை எரிக்க வேண்டும்.
ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார் 2200 முதல் 3000 கலோரிகளை உட்கொள்ள வேண்டும், அதேசமயம் 2500 முதல் 3000 கலோரிகளை எரிக்க வேண்டும்.
2000 கலோரிகளை பெற
ஐசிஎம்ஆர் அறிக்கையின் படி, தினசரி உணவில் 270 கிராம் தானியங்கள் இருக்க வேண்டும். இது 2000 கலோரிகளை வழங்குகிறது. இதில் 90 கிராம் பருப்பு இருந்தால், அது 17% கலோரிகளை வழங்குகிறது.
பால், தயிர் கலோரி அளவு
தினமும் 300 கிராம் பால் அல்லது தயிர் உட்கொள்ள வேண்டும். இது நம் உடலுக்குத் தேவையான கலோரிக் ஆற்றலில் 10 சதவீதத்தை வழங்குகிறது. 150 கிராம் பழங்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும், இது 3 சதவீத கலோரிகளை வழங்குகிறது.
நட்ஸில் எவ்வளவு கலோரி உள்ளது?
தினசரி உணவில் 20 கிராம் நட்ஸ் அல்லது விதைகளை சேர்த்தால் உடலுக்குத் தேவையான 8 சதவீத கலோரிகள்கிடைக்கும். நெய் மற்றும் கொழுப்புகளை சேர்ப்பது 12 சதவீத கலோரிகளை வழங்குகிறது.