உடற்பயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான உணவின் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். இதில் வொர்க்அவுட்டிற்குப் பிறகு சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்
பழுப்பு அரிசி
பழுப்பு அரிசியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை பசியைக் கட்டுப்படுத்தவும், உடலுக்கு உற்சாகத்தை அளிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால் இவை உடல் எடை இழப்புக்கு சிறந்ததாகும்
நட்ஸ்
முந்திரி, பாதாம் மற்றும் வால்நட் போன்றவற்றில் வைட்டமின்கள், கால்சியம், ஃபிளவனாய்டுகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடற்பயிற்சிக்குப் பின் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது
பழங்கள்
ஆப்பிள், ஆரஞ்சு போன்ற குறைந்த கலோரி நிறைந்த பழங்கள் உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சிக்குப் பிந்தைய உணவுக்கு ஏற்றதாகும். இதில் உள்ள வைட்டமின்கள், ஃபிளவனாய்டுகள் போன்றவை செரிமானத்தை ஊக்குவித்து, உடல் எடையிழப்புக்கு உதவுகிறது
பருப்பு
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் தாதுக்கள், புரதங்கள் போன்றவை உள்ளது. இவை பசியைக் கட்டுப்படுத்தவும், உடல் வலிமை அதிகரிக்கவும், எடையிழப்புக்கும் உதவுகிறது
விதைகள்
பூசணி விதைகள், எள் மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள், தாதுக்கள் உள்ளது. இவை வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து எடையிழப்பை ஊக்குவிக்கிறது
முட்டைகள்
இது உயர்தர புரதங்கள் நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். இது தசை மீட்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது உடற்பயிற்சிக்குப் பிந்தைய உணவின் சிறந்த தேர்வாகும்
அவுரிநெல்லி
இவை ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை தசை மீட்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கிறது
கீரை வகைகள்
கீரை ஒரு சிறந்த சூப்பர்ஃபுட்டாகக் கருதப்படுகிறது. இதில் உள்ள ஏராளமான தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் போன்றவை உடற்பயிற்சிக்குப் பிறகு உடலுக்கு ஆற்றலை அளிக்கவும், உடல் எடையிழப்புக்கும் உதவுகிறது