உடல் எடை குறையணுமா? நைட்ல இந்த ஃபுட் சாப்பிடாதீங்க

By Gowthami Subramani
11 May 2024, 09:00 IST

உடல் எடையைக் குறைக்க சில உணவுகளை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது. இதில் உடல் எடையைக் குறைக்க இரவில் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன என்பதைக் காணலாம்

சர்க்கரை உணவுகள்

குக்கீகள், கேக்குகள், மிட்டாய்கள் மற்றும் சர்க்கரை பானங்கள் போன்ற சர்க்கரை உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு மற்றும் உடல் எடையை அதிகரிக்கவும் காரணமாகிறது. எனவே இதை இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

காரமான உணவுகள்

காரமான உணவுகள் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்தை ஏற்படுத்தலாம். இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், உடல் எடையை அதிகரிக்கிறது

உப்பு நிறைந்த உணவுகள்

சிப்ஸ் அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் போன்ற உப்பு நிறைந்த தின்பண்டங்கள் மற்றும் உணவுகள் உடல் எடை அதிகரிப்புடன், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

அதிக புரோட்டீன்கள்

புரதம் இன்றியமையாததாக இருப்பினும், சிவப்பு இறைச்சி போன்ற மிக அதிக புரத மூலங்களை உட்கொள்வது செரிமானம் அடைய நேரம் எடுக்கலாம். இது அசௌகரியத்தை ஏற்படுத்தவும், எடை அதிகரிப்பிற்கு காரணமாகவும் அமைகிறது

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள்

வெள்ளை ரொட்டி, பாஸ்தா, பேஸ்ட்ரிகள் மற்றும் சர்க்கரை தானியங்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது

அதிகளவு உணவு

உணவின் உள்ளடக்கத்தைப் பொருட்படுத்தாமல், இரவு தூங்கும் முன் அதிக அளவிலான உணவை உட்கொள்வது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தலாம். இது உடல் எடை அதிகரிப்பிற்கும் காரணமாகிறது