உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கிறது. இதற்கு உடல் எடை குறைய தவிர்க்க வேண்டிய உணவுகளைக் காணலாம்
சர்க்கரை உணவுகள்
பானங்கள் மற்றும் சர்க்கரை உணவுகள் போன்றவை அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. இது உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. அதிகளவு மது அருந்துவது, இதய நோய், பக்கவாதம் போன்றவற்றை அதிகரிக்கலாம்
பீட்சா
பீட்சாக்கள் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருள்களால் தயாரிக்கப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் பீட்சா உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
கேக் மற்றும் குக்கீஸ்
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கேக் அல்லது குக்கீயை சாப்பிடலாம். இதில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளதால் உடல் எடையைக் குறைப்பவர்கள் கேக், குக்கீஸ் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
மது அருந்துதல்
உடல் எடை குறைய மது அருந்துவதைக் குறைக்க வேண்டும். மது அருந்துவது உடல் எடை குறைவதைப் பாதிக்கும் காரணியாக அமைகிறது
வெள்ளை ரொட்டி
இது அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும், இதில் உள்ள பசையம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். எனவே வெள்ளை ரொட்டி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்