வெயிட் லாஸ் செய்பவர்கள் மறந்தும் சாப்பிடக்கூடாத உணவுகள்

By Gowthami Subramani
13 Jul 2024, 10:51 IST

உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த அதிகரித்து வரும் உடல் எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்

உடல் எடையை வேகமாகக் குறைக்க விரும்புபவர்கள் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதில் எடை குறைய விரும்புபவர்கள் என்னென்ன உணவுகளைத் தவிர்க்கலாம் என்பதைக் காணலாம்

சர்க்கரை

எடை குறைய சர்க்கரை மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதிகளவு சர்க்கரையை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேரும். அதன்படி, சாக்லேட், மிட்டாய், கேக் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்க்கலாம்

பேக் செய்யப்பட்ட உணவுகள்

ரெடிமேட் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும். இதில் அதிகளவிலான சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்பு நிறைந்துள்ளது. எனவே எடை குறைய இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

வறுத்த உணவுகள்

வறுத்த உணவுகளில் அதிக கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் போன்றவை உள்ளது. இதனை உட்கொள்வதால் எடை வேகமாக அதிகரிக்கலாம். மேலும் இது வீக்கம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்றவற்றையும் ஏற்படுத்தலாம்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

உடல் எடை குறைய விரும்புபவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது எடை அதிகரிப்பு வழிவகுக்கிறது. எனவே எடையிழப்புப் பயணத்தில் உள்ளவர்கள் இந்த உணவுகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்