வயிற்றில் உள்ள கொழுப்பு கரைந்து ஓட பெருங்காயத்தை இப்படி சாப்பிடுங்க!

By Karthick M
20 Apr 2024, 22:28 IST

உடல் எடை குறைக்க பெருங்காயம்

உணவின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகரிக்க ஒரு சிட்டை பெருங்காயம் சமையலில் சேர்க்கப்படுவது வழக்கம். பெருங்காயம் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பெருமளவு நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் பெருங்காயம் கலந்து தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

நிறைந்துள்ள சத்துக்கள்

கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், ரைபோஃப்ளேவின், புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் பெருங்காயத்தில் நிறைந்துள்ளது. இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

எடை இழப்பு

உடல் எடையை குறைக்க விரும்பினால் பெருங்காயத்தை தாராளமாக உட்கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் பெருங்காய நீர் உட்கொண்டால் வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தி பசி குறையும், இதனால் உடல் எடை முற்றிலும் குறையும்.

கெட்ட கொலஸ்ட்ரால்

பெருங்காய தண்ணீர் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. பெருங்காயம் தினமும் உட்கொள்வதால் தமனிகளில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு பல கடுமையான நோய்களிலுந்து உடலை பாதுகாக்கும்.

செரிமான அமைப்பு

பெருங்காயத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. வீக்கம், வாயு மற்றும் அஜீரணத்தை குறைக்க பெருங்காய நீர் குடிக்கவும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

மேலும் இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் 1-2 சிட்டிகை சேர்த்து ஒரு கரண்டியால் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.