மாஸ் வேகத்தில் எடை குறைய தினமும் 30 நிமிஷம் நடந்தா போதும்!

By Gowthami Subramani
30 Jan 2025, 16:06 IST

நடைபயிற்சி செய்வது எடையிழப்புக்கு உதவும் என்பது தெரியும். ஆனால், ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டும் நடைபயிற்சி மேற்கொள்வது கொழுப்பைக் கரைத்து மனநிலையை அதிகரித்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதில் 30 நிமிடம் நடைபயிற்சி செய்வது எவ்வாறு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்பதைக் காணலாம்

தசைகளை வலுப்படுத்துவதற்கு

நடைபயிற்சி மேற்கொள்வது கைகள், கால்கள் மற்றும் மையப்பகுதியுடன் கூடிய நோக்கத்துடன் செய்யும்போது ஈடுபடுத்துகிறது. இது தசைகளை வலுப்படுத்த உதவுகிறது

தொப்பை கொழுப்பைக் குறைக்க

நடைபயிற்சி செய்வது உடலில் தேங்கியிருக்கும் பிடிவாதமான தொப்பைக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது

சர்க்கரை பசியை நீக்க

இனிப்புப் பசி காரணமாக சாக்லேட்டுகள், கேக்குகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம். தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது சர்க்கரை பசியைக் குறைக்க உதவுகிறது

வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த

30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை தினமும் செய்வது உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது

நல்ல மனநிலை மேம்பாட்டிற்கு

ஒரு நல்ல நடைபயணம் உடலிலிருந்து மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது மனநிலையை உயர்வாகவும், உந்துதலை வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது

மன அழுத்தத்தைக் குறைக்க

தினந்தோறும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது எடை அதிகரிப்பதற்கு காரணமான மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவுகிறது