உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா.? அப்போ தினமும் ஊற வைத்த பாதாமை முயற்சிக்கவும்.! இதனை எப்படி செய்யனும் தெரியுமா.? இங்கே காண்போம்...
கொழுப்பை எரிக்கும்
எடை இழப்புக்கு பாதாம் மிகவும் நல்லது. இதில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள லிபேஸ் என்சைம் கொழுப்பை குறைக்க உதவுகிறது. கொழுப்பை எரிக்க இது நல்லது.
எடை குறையும்
பாதாமை ஊறவைக்கும்போது இந்த நொதி அதிகமாக உற்பத்தியாகிறது. இதனால் தான் ஊறவைத்த பாதாம் பருப்பை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க மிகவும் நல்லது.
பாதாமை ஏன் ஊறவைக்க வேண்டும்?
ஊறவைப்பது பாதாமில் உள்ள ஃபெரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. பாதாமில் உள்ள கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சாமல் தடுக்கும் பொருட்களில் பைடிக் அமிலமும் ஒன்று.
ஊறவைப்பதன் நன்மைகள்
பாதாமை ஊறவைக்கும்போது அதிலுள்ள பைடிக் அமிலம் வெளியே வருகிறது. மேலும், பாதாமை ஊறவைப்பதால் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறப்பாக கிடைக்கின்றன. இது பாதாம் தோலில் உள்ளது. செல் ஆரோக்கியத்திற்கு இது அவசியம்.
எலும்பு ஆரோக்கியம்
பாதாமை ஊறவைப்பதால் அதில் உள்ள பாஸ்பரஸ் அதிகமாக கிடைக்கும். எலும்பு ஆரோக்கியத்திற்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் பாஸ்பரஸ் மிகவும் முக்கியமானது. ஊறவைத்த பிறகு டானின்கள் மற்றும் பைடிக் அமிலத்தை அகற்றவும் உதவுகிறது.