டீ குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா?

By Karthick M
04 May 2024, 19:39 IST

டீ குடிப்பதால் உங்கள் எடை அதிகரிக்குமா இல்லையா என்பது டீயில் பயன்படுத்தப்படும் பொருட்களை பொறுத்தது. சரி, பதிலுக்கு வந்தோமானால் பால் டீ, சர்க்கரை கலந்து குடித்தால் உடல் எடை கூடும் என்பதே நிதர்சனம்.

எவ்வளவு எடை அதிகரிக்கும்?

பால் டீயில் அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து குடித்தால் ஒரு வருடத்தில் ஒரு கிலோ வரை எடை அதிகரிக்கும். டீ தயாரிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.

டீயில் சர்க்கரையை குறைக்கவும்

டீ குடித்து உடல் எடை அதிகரிக்கக் கூடாது என்றால் சர்க்கரை அளவை குறைக்க வேண்டும். விரும்பினால் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம், தேன், சிவப்பு சர்க்கரை போன்ற இயற்கை இனிப்புகளை சேர்த்துக் கொள்ளலாம்.

கொழுப்புள்ள பாலை தவிர்க்கவும்

டீ போடுவதற்கு கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பயன்படுத்தவும். அதேபோல் பால் பவுடன் போன்றவற்றை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு குறைந்த அளவு டீ குடிப்பது நல்லது. உடல் நலம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.