வெள்ளரிக்காய் சாப்பிட்டால் உடல் எடையை குறையுமா?

By Kanimozhi Pannerselvam
20 Jan 2025, 00:29 IST

உடல் எடையை குறைக்க விரும்பினால் முதலில் செய்ய வேண்டியது, தினமும் வெள்ளரி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வெள்ளரியை ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவற்றில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றால் பல நன்மைகள் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைப்பதில் வெள்ளரிக்காய் பெரும் பங்கு வகிக்கிறது.

வெள்ளரிக்காயை எப்படி சாப்பிடலாம்?

வெள்ளரிக்காய் சாப்பிடும் போது, ​​பச்சையாக சாப்பிடுவது நல்லது. தினமும் குறைந்தது இரண்டு வெள்ளரிக்காய் உட்கொள்ளலாம். நாம் அன்றாடம் உண்ணும் சாலட்களில் சில துண்டு பச்சை வெள்ளரிக்காய்காய்களை சேர்க்கலாம்.

அசைவத்துடன் சாப்பிடலாமா?

அசைவ சாலட்டாக இருந்தாலும் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம். தோலுடன் அல்லது தோலில்லாமல் சாப்பிடலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.

உடல் எடை குறையுமா?

உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு. காலையில் இரண்டு அல்லது மூன்று வெள்ளரிக்காய் துண்டுகளை சாப்பிட்டு உங்கள் நாளைத் தொடங்கலாம். இது நமது வயிற்றுக்கு தேவையான நீரேற்றத்தையும் அளிக்கும்.

பசியைக் கட்டுப்படுத்தும்

தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும். வெள்ளரிக்காயில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளது. இது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனவே தினமும் ஒன்று அல்லது இரண்டு வெள்ளரிகள் சாப்பிடலாம். இதனால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து கிடைப்பதோடு பசியை கட்டுக்குள் வைக்க முடியும்.

இதனால் எடை அதிகரிக்காது

வெள்ளரிக்காய் நமது இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. ஏனெனில் வெள்ளரியில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது. இவை அனைத்தும் நமது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்கள் நம்மைத் தேடி வராது. அவை இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகின்றன. இது நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது.