விரதம் இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவுமா?

By Gowthami Subramani
08 Nov 2024, 08:36 IST

விரதம் இருப்பது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் விரதம் எவ்வாறு எடையை எவ்வாறு குறைக்க உதவுகிறது என்பது குறித்து காணலாம்

குறைந்த கலோரி உட்கொள்ளல்

விரதம் இருப்பது உண்ணும் நேரத்தைக் கட்டுப்படுத்துகிறது. பெரும்பாலும் இது ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஏற்படுத்தலாம்

அதிகரித்த வளர்ச்சிதை மாற்றம்

விரதம் இருப்பது உடல் ஆற்றலுக்காக சேமிக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்தத் தொடங்குகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் உடல் எடையிழப்புக்கு உதவுகிறது

இன்சுலின் உணர்திறன் மேம்பாடு

வழக்கமான உண்ணாவிரதம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இவை உடல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், எடையிழப்புக்கும் உதவுகிறது

கொழுப்பு எரிப்பு

நோர்பைன்ப்ரைன் போன்ற சில ஹார்மோன்களை உண்ணாவிரதம் தூண்டுகிறது. இவை கொழுப்பு எரிப்பதை மேம்படுத்துகிறது. மேலும் பவுண்டுகளைக் குறைக்க உதவுகிறது

விரதம் இருப்பது எடை இழப்புக்கு உதவும் என்றாலும், அது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. எனவே விரதத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுவது முக்கியம்