எடையிழப்புக்கு மொரிங்காவை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?

By Gowthami Subramani
14 Feb 2025, 17:55 IST

முருங்கை இயற்கையாகவே பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட உணவுப்பொருளாகும். இதில் உள்ள சத்துக்கள் உடல் எடையைக் குறைப்பது முதல் பைல்ஸ் போன்ற கடுமையான நோய்களுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் எடை குறைய மொரிங்காவை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

முருங்கையில் கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை சீராக்குகிறது

மொரிங்கா தண்ணீர்

மொரிங்கா இலைகளைத் தண்ணீரில் ஊறவைத்து மொரிங்கா தண்ணீரைத் தயார் செய்யலாம். இந்த தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்

மொரிங்கா இலை பொடி

முருங்கை இலைகளை உலர்த்திய பிறகு பொடியாக்கி அதை இளஞ்சூடான வெந்நீரில் சேர்த்து கலந்து குடிக்கலாம். இந்த வெதுவெதுப்பான நீரை அருந்துவது எடையைக் குறைக்க உதவுகிறது

முருங்கை ஸ்மூத்திகள்

முருங்கை இலைப்பொடியை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம். காலை உணவாக அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு ஸ்மூத்திகளைக் குடிக்கலாம்

முருங்கை சூப்

சூடான மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானமாக முருங்கை சூப் அமைகிறது. இது குறைந்த கலோரிகள் கொண்டதாகும். இந்த சூப்பை உட்கொள்வதன் மூலம் எடையிழப்பை ஆதரிக்கலாம்

முருங்கை சப்ளிமெண்ட்ஸ்

எடையைக் குறைக்க இயற்கை சப்ளிமெண்ட்டாக முருங்கை மாத்திரைகள் அல்லது காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்ளலாம்