பிரசவத்திற்குப் பின் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை பல பெண்களும் எதிர்கொள்கின்றனர். எனினும் சில ஆரோக்கியமான வழிகளுடன் பிரசவத்திற்குப் பிறகு அதிகரிக்கும் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். இதில் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகளைக் காணலாம்
ஆரோக்கியமான உணவுமுறை
பிரசவத்திற்குப் பின், உணவில் அதிகபப்டியான கவனம் செலுத்துவது அவசியமாகும். நல்ல, சத்தான மற்றும் புதிய உணவைத் தேர்ந்தெடுக்கலாம்
நார்ச்சத்து உணவுகள்
அன்றாட உணவில் நார்ச்சத்துக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். இவை உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
யோகா செய்வது
பிரசவத்திற்குப் பிந்தைய கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள், லேசான யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன், உடலின் நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்கிறது
வெந்நீர்
கொழுப்பை உருக்கி வீக்கத்தைக் குறைக்க சூடான நீர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே பிரசவத்திற்குப் பிறகு, சுமார் 6 மாதங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்த நீரைக் குடிக்க வேண்டாம்
மசாஜ் செய்வது
சாதாரண பிரசவம் என்றால், வயிற்றில் மசாஜ் செய்யலாம். இது உடல் எடையைக் குறைக்க ஏதுவாக இருக்கும்
செலரி நீர்
தொப்பை கொழுப்பு வீக்கத்தைக் குறைப்பதற்கும் பிரசவத்திற்குப் பிறகு செலரி தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது தாயின் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது
குறிப்பு
பிரசவத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும். எனவே உடல் எடையைக் குறைப்பதைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் மீதும் கவனம் செலுத்துவது முக்கியம்