வேகன் டயட் என்பது சைவ உணவு உண்பதைக் குறிப்பதாகும். இதில் சைவ உணவு உண்பவர்கள் உடல் எடை குறைய எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளைக் காணலாம்
ஓட்ஸ்
நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுப் பொருளாக ஓட்ஸ் உள்ளது
நட்ஸ்
ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ் வகைகள் எடைக் கட்டுப்பாட்டிற்கு சிறந்த சைவ உணவாகும்
சோயா
சோயா அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கலோரிகளைக் கொண்டுள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
குயினோவா
தானிய வகையான குயினோவாவில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது
அதிக கொழுப்புள்ள பழங்கள்
அதிகளவிலான கொழுப்பு கொண்ட அவகேடோ மற்றும் ஆலிவ் போன்ற பழங்கள் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்
சீமை சுரைக்காய், ப்ரோக்கோலி மற்றும் இலை கீரைகள் போன்ற மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் உடல் எடையைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது