உடல் எடை குறைய காலை நேரத்தில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

By Gowthami Subramani
27 Feb 2024, 18:26 IST

காலை நேரத்தில் சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவை தொப்பையைக் குறைப்பதுடன், ஒட்டுமொத்த கொழுப்பையும் எரிக்க உதவுகிறது

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன் எடையைக் குறைக்க உதவுகிறது

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சிறிது தேனை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இவை உடல் எடையைக் குறைப்பதுடன், இன்சுலின் உணர்திறனை அதிகரித்து பசியிலிருந்து நிவாரணம் தருகிறது

கிரீன் டீ

கிரீன் டீயில் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்த உதவும் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் நிறைந்த கிரீன் டீயை அருந்துவது கொழுப்பை எரிக்க உதவுகிறது

மஞ்சள் நீர்

மஞ்சளில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வீக்கத்தைக் குறைப்பதுடன் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதற்கு சுவைக்கு எலுமிச்சை, தேன் மற்றும் இலவங்கப்பட்டைத் தூள் போன்றவற்றைச் சேர்க்கவும்

இஞ்சி டீ

பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் இஞ்சி டீ அருந்துவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதுடன் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

சியா விதை நீர்

வெறும் வயிற்றில் சியா விதை நீர் குடிப்பது உடலில் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. இவை பசியை எளிதாகக் கட்டுப்படுத்துகிறது