நீரிழிவு, உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை போன்றவை பெரும்பாலும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையால் ஏற்படுவதாகும். இந்த பிரச்சனையைத் தவிர்க்க உடல் எடையைக் குறைப்பது அவசியமாகும். உடல் எடை குறைய உதவும் சிறுதானிய வகைகளைக் காணலாம்
நார்ச்சத்துக்கள் நிறைந்த
சிறுதானியங்களில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு சிறுதானிய வகைகளும் வெவ்வேறு அளவுகளில் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளன
சோளம்
சோளத்தில் வைட்டமின் பி, மக்னீசியம்போன்றவை நிறைந்துள்ளன. இதில் உள்ள ஃபிளவனாய்டுகள், பீனோலிக் அமிலம், டானின்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
குயினோவா
மற்ற சிறுதானியங்களைக் காட்டிலும் குயினோவாவில் அதிகளவு நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளது. இவை உடலில் கெட்ட கொழுப்புகள் சேருவதைத் தடுக்கிறது
ராகி
ராகியில் உள்ள இரும்புச்சத்துக்கள் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் ராகி உண்பது செரிமானத் தன்மை கொண்டுள்ளது. இவை உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது
தினை அரிசி
தினை அரிசியில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இதன் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது
குதிரைவாலி
குதிரைவாலியில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
இந்த சிறுதானிய வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன், உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது