உடற்பயிற்சிக்கு பிறகு இத சாப்பிடுங்க. எடை வேகமா குறையும்.!

By Gowthami Subramani
09 Jan 2024, 10:03 IST

உடல் எடையைக் குறைக்கவும், தசைகளை மீட்டெடுக்கவும் உடற்பயிற்சிக்குப் பிறகு சரியான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிட வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்

கிரேக்க தயிர்

தயிர் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுப் பொருளாகும். இது தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. மேலும், இது குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன் எடை இழப்பை ஊக்குவிக்கிறது

சீஸ்

குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் அதிக புரோட்டீன் நிறைந்த பாலாடைகட்டி தசை மீட்சிக்கு உதவுகிறது. மேலும், இதை உண்பது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது

முட்டை

அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் உயர்தர புரதங்கள் நிறைந்த முட்டைகள் தசைகளைப் பழுதுபார்ப்பதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுகின்றன

ஓட்ஸ்

நீடித்த ஆற்றலை வழங்கக் கூடிய மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்ட சிறந்த உணவுப் பொருளே ஓட்ஸ் ஆகும். இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், பசியைக் குறைத்து உடல் எடை இழப்புக்கு உதவுகிறது

வெஜிடபிள் சாலட்

உடற்பயிற்சிக்கு பின் கேரட், வெங்காயம், தக்காளி, பீட்ரூட் மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது

இந்த உணவுகள் அனைத்தும் உடற்பயிற்சிக்குப் பிறகு சாப்பிட வேண்டிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாகும்