நெல்லிக்காய் பவுடரை தினமும் உட்கொண்டால், உங்கள் எடை சட்டுன்னு குறையும் என்றால் உங்களால் நன்ப முடிகிறதா? இது குறித்து இங்கே காண்போம்.
ஆம்லா பவுடரில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உடலில் உள்ள கலோரிகளை எரிக்க நெல்லிக்காய் பொடி உதவுகிறது.
இது செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்கிறது.
நெல்லிக்காய் பொடியை எடுத்துக் கொள்வது உடலில் சேரும் நச்சுக்களை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் உடலில் இருந்து தேவையற்ற கொழுப்புகள் மற்றும் கலோரியைக் குறைக்கலாம்.
நெல்லிக்காய் பொடியை பயன்படுத்துவது எப்படி?
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து குடித்துவர உடல் எடையைக் குறைக்கலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது படுக்கைக்கு முன் இதைக் குடித்து வர, உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளைக் குறைக்கலாம்.