உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் இரவு நேரத்தில் சில ஆரோக்கியமான பழக்கங்களைக் கையாள வேண்டும். இது தூங்கும் போது கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதில் எடையைக் குறைக்க உதவும் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் காணலாம்
மாலை உடற்பயிற்சி
உடற்பயிற்சி எடை இழப்புக்கு சிறந்தது. ஆனால், மாலை நேரத்திலேயே உடற்பயிற்சியை முடிக்க முயற்சிக்க வேண்டும். இது உடலை ஓய்வெடுக்க அனுமதிப்பதுடன், நன்றாக தூங்கவும் நேரத்தைத் தருகிறது
உணவுக்குப் பின் நடைபயிற்சி
இரவு உணவுக்குப் பின்னதாக ஒரு குறுகிய நடைபயிற்சி மேற்கொள்வது உடலில் செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இது உடல் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது
சரியான நேரத்தில் இரவு உணவு
படுக்கைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு முன்பாக இரவு உணவு சாப்பிட வேண்டும். மிகவும் தாமதமாக சாப்பிடுவதால் தூக்கம் சீர்குலைக்கப்பட்டு, ஓய்வெடுக்கும்போது உடல் கலோரிகளை எரிப்பதை கடினமாக்குகிறது
சிற்றுண்டிகளைத் தவிர்த்தல்
இரவு தாமதமாக சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இரவு உணவுக்குப் பிறகு சிற்றுண்டி எடுத்துக் கொள்வதை விரும்புபவர்கள் மாலையில் ஒரு சிறிய, ஆரோக்கியமான சிற்றுண்டியைத் தேர்வுசெய்யலாம்
திரை நேரத்தைக் கட்டுப்படுத்துதல்
படுக்கைக்கு முன் தொலைபேசிகள், கணினிகள் அல்லது டிவி போன்ற திரைகளைப் பார்ப்பதற்கான நேரத்தைத் தவிர்க்க வேண்டும். இதிலிருந்து வரும் நீல ஒளி தூக்கத்தைப் பாதிக்கலாம்
நல்ல தூக்கம்
நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதற்கான தூக்கசுழற்சியைக் கையாள வேண்டும். இது உடலில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி, கொழுப்பை மிகவும் திறம்பட எரிக்க உதவுகிறது
தியானம் செய்வது
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் இது உடலை ஆழ்ந்த தூக்கத்திற்குத் தயார்படுத்துகிறது. இது காலப்போக்கில் எடையிழப்பை ஆதரிக்கிறது