தொப்பை இல்லாத தட்டையான வயிற்றுக்கு நைட்ல இந்த ஃபுட்ஸ் சாப்பிடுங்க

By Gowthami Subramani
06 May 2025, 20:31 IST

வயிற்றுத் தொப்பையைக் குறைக்க இரவு நேரத்தில் லேசான உணவை எடுத்துக் கொள்ளலாம். இதில் தட்டையான வயிற்றைப் பெற விரும்புபவர்கள் இரவில் சாப்பிட வேண்டிய உணவுகளைக் காணலாம்

அரிசி மற்றும் பருப்பு

இரவு உணவாக பருப்பு மற்றும் சாதம் சாப்பிடுவது வயிற்றை லேசான வைத்திருக்க உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது

இட்லி

இரவில் இட்லி சாப்பிடுவது செரிமானத்தை எளிதாக்குவதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அமைகிறது. மேலும் இது விரைவாக தயாரிக்கப்படும் உணவாகும்

சூப்

சூப் குறைந்த கலோரிகளைக் கொண்ட, ஆரோக்கியமான மற்றும் சுவையான தேர்வாகும். இது செரிமானத்திற்கு ஏற்றதாகும்

ரவை உப்மா

ரவை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகும். மேலும் ரவை உப்மாவில் ஆரோக்கியமான காய்கறிகளைச் சேர்ப்பது கூடுதல் ஆரோக்கியத்தைத் தருகிறது

சாலட்

கேரட், பீட்ரூட், சோளம், வெள்ளரிக்காய், தக்காளி, பச்சைப் பயறு, சீஸ் போன்றவற்றைக் கலந்து மசாலா, உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்த சாலட் தயார் செய்யலாம். இது லேசான இரவு உணவாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைகிறது

வறுத்த காய்கறிகள்

இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவிற்கு, பிடித்த காய்கறிகளை அரை டீஸ்பூன் தேசி நெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வறுத்து அதில் கருப்பு மிளகுத் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தயார் செய்து சாப்பிடலாம்

குறிப்பு

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இரவில் இந்த லேசான உணவை எடுத்துக் கொள்ளலாம். இது தவிர, இரவில் சீக்கிரம் இரவு உணவு சாப்பிடுவது, சாப்பிட்ட உடனேயே தூங்குவதைத் தவிர்ப்பது போன்ற எடை மேலாண்மை குறிப்புகளைக் கையாள வேண்டும்