கஷ்டமே வேணாம்! தொங்கும் தொப்பையை குறைக்க இந்த 7 பழங்கள் போதும்!

By Karthick M
28 Nov 2024, 21:30 IST

தொப்பையை குறைக்க பலர் பல முயற்சிகலை மேற்கொள்கின்றனர். இதற்கு உதவும் சிறந்த பழ வகைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்கள் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழமாகும். இவை சளியை எதிர்த்துப் போராடுவது மட்டுமல்லாமல், எடை இழப்புக்கும் ஏற்றதாக அமைகிறது.

வாழைப்பழங்கள்

இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை வெகுவாகக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இடுப்பு சதையை குறைக்க பெருமளவு உதவியாக இருக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து வகையான பெக்டின் உள்ளது. இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கி வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சை சிறந்த நச்சுத்தன்மை கொண்ட பழமாகும். இவை எடை இழப்பை ஊக்குவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

அவகேடோ

பழத்தில் வைட்டமின் ஈ, கே, பொட்டாசியம் மற்றும் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வாட்டர் மெலன்

பலரும் தங்களது டயட் முறையில் வாட்டர் மெலனை சேர்த்துக் கொள்கிறார்கள். இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது பூரணமாக வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதால், அதிக பசி ஏற்படாது.

பப்பாளி

பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. உடல் எடையினை குறைக்க நார்ச்சத்தானது மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது.