சம்மரில் ஸ்கின் பளபளப்பாக இருக்க இந்த ஃபேஸ்பேக் அப்ளை பண்ணுங்க

By Gowthami Subramani
19 Mar 2025, 17:30 IST

வறண்ட சருமத்தால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாக ஃபேஸ் மாஸ்க் அமைகிறது. ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய பயன்படுத்தப்படும் இயற்கை பொருட்கள் ஆழமான நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது சருமத்தை மென்மையாக, புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது

தேன், வாழைப்பழம் ஃபேஸ் மாஸ்க்

1 தேக்கரண்டி தேனுடன் ஒரு பழுத்த வாழைப்பழத்தைச் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் ஈரப்பதம் நிறைந்துள்ளது. இது வறண்ட சருமத்தை மென்மையாக மற்றும் நீரேற்றமடைய வைக்க உதவுகிறது

கற்றாழை, வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்

இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய அரை வெள்ளரிக்காயை 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லுடன் கலக்க வேண்டும். இதை முகத்தில் தடவுவதன் மூலம் சருமம் ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சியடைய வைக்கிறது. அதே நேரத்தில், இது சிவத்தல் அல்லது எரிச்சலைக் குறைக்கிறது

ஓட்ஸ், பால் ஃபேஸ் மாஸ்க்

2 தேக்கரண்டி ஓட்மீலை போதுமான பாலுடன் கலந்து பேஸ்ட்டை உருவாக்கலாம். வறண்ட, எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்ற இதை முகத்தில் தடவுவதன் மூலம் சருமம் மெதுவாக உரிந்து ஈரப்பதத்தை தக்க வைக்கிறது

அவகேடோ, ஆலிவ் எண்ணெய் மாஸ்க்

அரை அவகேடோ பழத்தை 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் பிசைந்து முகத்தில் தடவ வேண்டும். அவகேடோ பழத்தின் வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்குகிறது. அதே சமயம், ஆலிவ் எண்ணெய் ஒரு பாதுகாப்பு அடுக்காக அமைகிறது

தயிர், தேன் ஃபேஸ் மாஸ்க்

1 தேக்கரண்டி தேனை 2 தேக்கரண்டி தயிருடன் கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இதில் தேன் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும், தயிர் வறண்ட சருமத்தை ஆற்றவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது