சம்மர் வந்துருச்சி! முடி ஆரோக்கியத்திற்கு மறந்தும் இதை செய்யாதீங்க

By Gowthami Subramani
21 Mar 2025, 17:27 IST

கோடைக்காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடல் ஆரோக்கியத்துடன், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். எனவே கோடையின் போது சில கூந்தல் பராமரிப்புகளைத் தவிர்க்க வேண்டும். இதில் சீரான தலைமுடி ஆரோக்கியத்திற்கு கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைக் காணலாம்

அதிகம் கழுவுவது

தலைமுடியை அடிக்கடி கழுவுவதால் இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு வறட்சியை அதிகரிக்கிறது. எனவே லேசான ஷாம்பூவைக் கொண்டு ஒவ்வொரு 2-3 நாட்களுக்கும் கழுவ முயற்சிக்கலாம்

சூரிய பாதுகாப்பைப் புறக்கணிப்பது

நேரடியான சூரிய ஒளி வறட்சி மற்றும் நிறம் மங்குவதற்கு வழிவகுக்கலாம். எனவே தலைமுடியை வெயிலிலிருந்து பாதுகாக்க UV-பாதுகாப்பு ஸ்ப்ரேயைப் பயன்படுத்தலாம் அல்லது தொப்பி அணியலாம்

ஹீட் ஸ்டைலிங் கருவிகளின் பயன்பாடு

ஸ்ட்ரைட்டனர்கள், ப்ளோ ட்ரையர்கள், மற்றும் கர்லிங் அயர்ன்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் முடி பலவீனமடைந்து சுருள் முடியை அதிகரிக்கலாம். எனவே முடிந்தவரை தலைமுடியைக் காற்றில் உலர விட வேண்டும்

ஈரமான முடியை இறுக்கமாகக் கட்டுவது

பொதுவாக ஈரமாக இருக்கும் போது தலைமுடியைக் கட்டுவது உடைந்து முடி இழைகளை பலவீனப்படுத்தலாம். எனவே ஸ்டைலிங் செய்வதற்கு முன் தலைமுடியை இயற்கையாக உலர விட வேண்டும்

கண்டிஷனரைத் தவிர்ப்பது

தலைமுடிக்கு கண்டிஷனரைத் தவிர்ப்பதால் தலைமுடியானது சுருள் மற்றும் வறட்சிக்கு வழிவகுக்கலாம். தலைமுடியை எடைபோடாமல் நீரேற்றமாக வைத்திருக்க லேசான கண்டிஷனரைப் பயன்படுத்தலாம்

தண்ணீர் குடிக்காமல் இருப்பது

நீரிழப்பு காரணமாக, முடி உடையக்கூடிய, வறண்ட நிலைமையை அடையலாம். எனவே நாள் முழுவதும் தலைமுடியை ஆரோக்கியமாகவும், ஊட்டமாகவும் வைத்திருக்க நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்