பளிச்சென்ற முகத்திற்கு முல்தானி மிட்டி தரும் அற்புத நன்மைகள்

By Gowthami Subramani
09 Sep 2024, 08:43 IST

சரும ஆரோக்கியத்தில் முல்தானி மிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் சருமத்திற்கு முல்தானி மிட்டி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

மென்மையான சருமத்திற்கு

முல்தானி மிட்டி குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டதாகும். இது சூரிய ஒளி, வெடிப்பு, பூச்சி கடி சரும அழற்சி போன்றவற்றை ஆற்ற உதவுகிறது

அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சுதல்

முல்தானி மிட்டியின் உறிஞ்சக்கூடிய பண்புகள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இது எண்ணெய் அல்லது முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்

முகப்பருக்களை நீக்க

முல்தானி மிட்டி சருமத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்தி அழுக்கு, வியர்வை மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது. இதன் மூலம் பருக்களைத் தடுக்க உதவுகிறது

சரும அமைப்பை மேம்படுத்த

சருமத்திற்கு முல்தானி மிட்டி ஃபேஸ் பேக் பயன்படுத்துவது ஊட்டச்சத்து நன்மைகளை அளித்து, சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பையும் மேம்படுத்துகிறது

இறந்த செல்களை நீக்க

முல்தானி மிட்டி சருமத்தில் காணப்படும் இறந்த சரும செல்களை நீக்குகிறது. மேலும், சருமத்தில் சுழற்சி மற்றும் அதன் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது

கரும்புள்ளிகளைக் குறைக்க

சருமத்திற்கு முல்தானி மிட்டியைப் பயன்படுத்துவது சருமத்தில் காணப்படும் கறைகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது