சருமம் ஜொலி ஜொலிக்க இந்த நட்ஸ், விதைகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
17 Nov 2024, 21:44 IST

சருமத்தை பளபளப்பாகவும், அழகாகவும் வைக்க சில ஆரோக்கியமான நட்ஸ், விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் சருமத்தை அழகாக்கும் நட்ஸ் மற்றும் விதைகளைக் காணலாம்

பாதாம்

இது சருமத்திற்கு நீரேற்றத்தைத் தரவும், வறட்சியை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாகவும், சுருக்கமில்லாத தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது. இவ்வாறு சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது

பேசன் ஃபுரூட் விதைகள்

இது வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்ததாகும். இவை கொலாஜனை அதிகரித்து, இளமையான சருமத்தைத் தருகிறது. மேலும், சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது

சூரியகாந்தி விதைகள்

இந்த விதைகள் வைட்டமின் ஈ நிறைந்ததாகும். இந்த விதைகள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, வறட்சியை எதிர்த்து, சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது

வால்நட்ஸ்

இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது. இவ்வாறு ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது

ஆளி விதைகள்

ஆளி விதைகளில் ஒமேகா-3 நிறைந்துள்ளது. இந்த விதைகள் சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன், மெல்லிய கோடுகளை குறைத்து, பொலிவான நிறத்தை ஊக்குவிக்கிறது

பூசணி விதைகள்

இது துத்தநாகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை சருமத்தை சரிசெய்யவும், முகப்பருவை குறைக்கவும், உறுதியான, ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கவும் உதவுகிறது