சில பழங்கள், காய்கறிகளின் தோல்கள், அதன் சதையைப் போன்றே சத்தாகக் காணப்படும். ஆனால் நாம் தூக்கி எறியப்படும் தோல்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரஞ்சு தோல்கள்
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை சருமத்தை ஒளிரச் செய்யவும், கரும்புள்ளிகளைக் குறைக்கவும், கொலாஜன் தொகுப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதற்கு உலர்ந்த ஆரஞ்சு தோலைப் பொடி செய்து தயிர் அல்லது தேன் சேர்த்து கலவையைத் தயார் செய்யலாம்
ஆப்பிள் தோல்கள்
இதில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை சருமத்தை புதுப்பிக்கவும், நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும் உதவுகிறது. இதற்கு ஆப்பிள் தோலை வேகவைத்து, முகத்தில் துளிர்விட, புத்துணர்ச்சியூட்டுவதாக அமைகிறது
அவகேடோ தோல்
அவகேடோ தோலில் நிறைய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை உங்கள் சருமம் மற்றும் சேதமடைந்த கூந்தலுக்கு நல்லது. இதை முகத்தில் தேய்த்து ஃபேஸ்மாஸ்க்காக பயன்படுத்தலாம்
வாழைப்பழத் தோல்
இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை சருமத்தை ஈரப்பதமாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான பளபளப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதற்கு வாழைப்பழத் தோலின் உட்புறத்தை சில நிமிடங்களுக்கு சருமத்தில் தேய்க்கலாம்
எலுமிச்சை தோல்
இதில் உள்ள சிட்ரிக் அமிலம் கரும்புள்ளிகளை ஒளிரச் செய்யவும், சருமத்தின் நிறத்தை சமன் செய்யவும் உதவுகிறது. மேலும் இது அதிகப்படியான எண்ணெயை நீக்கவும் உதவுகிறது. சர்க்கரை மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் பொடித்த எலுமிச்சை தோலை சேர்த்து ஸ்க்ரப் தயார் செய்து பயன்படுத்தலாம்
பப்பாளி தோல்
பப்பாளி தோல்களில் உள்ள பப்பைன் என்ற நொதிகள் இறந்த சரும செல்களை அகற்றி, சருமத்தை மென்மையாகவும், துடிப்பாகவும் மாற்றுகிறது. இதை ஃபேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்