சருமம் ஜொலிக்க இந்த உணவுகளை சாப்பிடவும்.!

By Ishvarya Gurumurthy G
26 Feb 2024, 12:40 IST

இயற்கையான முறையில் சருமத்தை வெள்ளையாக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

பாதாம்

பாதாமை ஊறவைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் முகம் வெள்ளையாகிவிடும்.

பால் பொருட்கள்

பால், பனீர், சீஸ், வெண்ணெய், நெய், தயிர் போன்ற பால் சார்ந்த பொருட்களை தினசரி உணவு வழக்கத்தில் இணைத்து வர வேண்டும்.

ஒமேகா 3 உணவுகள்

கொழுப்பு மீன்கள், நட்ஸ் மற்றும் விதைகளில் ஒமேகா 3 இருக்கும். இது உங்கள் சருமத்தை வெள்ளையாக்கும்.

குங்குமப்பூ

தினமும் பாலில் குங்குமப்பூ கலந்து குடிக்கவும். இது உங்கள் நிறத்தை மேம்படுத்த உதவும். மேலும் குங்குமப்பூவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் இதனை குடிக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்

தினமும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வரலாம். இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் சருமத்தை சேதப்படுத்தும்.

இலை காய்கறிகள்

தினமும் உணவில் இலை காய்கறிகளை இணைத்துக்கொள்ளுங்கள். இது சருமத்தில் உள்ள அழுக்கை நீக்குகிறது.