ரோஸ் வாட்டர் சருமத்திற்கு இதமான, புத்துணர்ச்சி அளிக்க பயன்படுகிறது என்றாலும் ரோஸ் வாட்டரில் தவறியும் சில பொருட்களை கலந்து முகத்தில் தடவக் கூடாது.
ஃபேஸ் ஆயில்
ரோஸ் வாட்டரை ஃபேஸ் ஆயிலுடன் கலந்து தடவவே கூடாது. ரோஸ் வாட்டர் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது, எனவே அது எண்ணெயுடன் நன்றாக கலக்காமல் போகலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையுடன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதேபோல் ரோஸ் வாட்டரும் சிறிது அமிலத்தன்மை கொண்டது.
ஆல்கஹால் அடிப்படையிலான டோனர்
நீங்கள் ஆல்கஹால் அடிப்படையிலான டோனரைப் பயன்படுத்தினால், அதனுடன் ரோஸ் வாட்டரைக் கலக்காதீர்கள். இது சரும வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கும்.
உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ரோஸ் வாட்டரை சிறந்த முறையில் பயன்படுத்துவது மிக நல்லது.