முகப்பரு இருக்கா? இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க

By Gowthami Subramani
16 Jan 2025, 17:39 IST

பொதுவாக ஹார்மோன்கள், வீக்கம் மற்றும் அடைபட்ட துளைகள் போன்ற காரணிகள் முகப்பருவை ஏற்படுத்துகிறது. இது தவிர, நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் சில உணவுமுறைகளும் முகப்பருக்களை மேலும் மோசமாக்கலாம். இதில் சருமத்தை பாதிக்கக்கூடிய உணவுகளைக் காணலாம்

பால் பொருட்கள்

பால், ஐஸ்கிரீம் மற்றும் சீஸ் போன்ற பால் பொருள்களை எடுத்துக் கொள்வதால், சிலருக்கு சரும உற்பத்தியை அதிகரிக்கும் ஹார்மோன்கள் காரணமாக முகப்பருவை மோசமாக்குகிறது

சாக்லேட்

சாக்லேட் வகைகள் குறிப்பாக பால் சாக்லேட் முகப்பருவை அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனினும், இதற்கான சரியான காரணம் முழுமையாகத் தெரியவில்லை

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்

வெள்ளை ரொட்டி, பாஸ்தா, சோடாக்கள் மற்றும் இனிப்புகள் போன்ற உணவுகள் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலினை அதிகரிக்கலாம். இது எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முகப்பருவை மோசமாக்கலாம்

ஃபாஸ்ட் ஃபுட்

பர்கர்கள், வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு மற்றும் கலோரி நிறைந்த உணவுகள் முகப்பருவின் அதிக அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகும்

காரமான உணவுகள்

அதிக காரமான உணவுகளை அதிகளவு உட்கொள்வது முகப்பருக்களின் நிலையை மேலும் மோசமாக்குகிறது

மோர் புரத பவுடர்

பொதுவாக உடற்பயிற்சி சப்ளிமெண்ட்களில் மோர் புரதம் உள்ளது. இது இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலமும், விரைவான தோல் செல் வளர்ச்சி காரணமாக அதிகரித்த சரும உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும் முகப்பருவுக்கு பங்களிக்கலாம்