எண்ணெய் பசை சரும பிரச்சனையா? இரவில் இதை பண்ணுங்க!

By Karthick M
28 Feb 2024, 14:50 IST

எண்ணெய் பசை சரும பிரச்சனை

எண்ணெய் பசை சரும பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் அதிலிருந்து விடுபட இரவில் தூங்கும் முன் சில சிறப்பு பொருட்களை முகத்தில் தடவலாம். அது என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

முல்தானி மிட்டி

இரவு தூங்கும் முன் முல்தானி மிட்டியை முகத்தில் தடவலாம். 1 ஸ்பூன் முல்தானி மிட்டி பொடியில் சில துளிகள் எலுமிச்சை மற்றும் அரை ஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவவும். 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் விழுதில் 3 முதல் 4 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் கலந்து தடவவும். தொடர்ந்து 5 நிமிடம் கழித்து ஸ்க்ரம் செய்தால் போதும்.

தயிர்

எண்ணெய் பசை தோலில் இருந்து விடுபட இரவில் தூங்கும் முன் தயிர் தடவவும். இது கூடுதல் எண்ணெயை நீக்குகிறது.

தக்காளி

இரவு தூங்கும் முன் தக்காளி சாற்றை முகத்தில் தடவவும். இதன் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் எண்ணெய் பசை சருத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். சருமத்தில் கூடுதல் எண்ணெய் சேராமல் தடுக்கும்.

அலோவேரா ஜெல்

கற்றாழை ஜெல்லை தடவினால் எண்ணெய் பசை சருமத்தில் இருந்து விடுபடலாம். கற்றாழை ஜெல் மூலம் முகத்தை மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.