முகத்தில் படுக்கள் வர என்ன காரணம் தெரியுமா? எதனால் பருக்கள் ஏற்படுகிறது என்பதை குறித்து இங்கே விரிவாக காண்போம்.
முகம் எப்போதும் திறந்த நிலையில் இருக்கும். இதனால் தூசி, வெப்பநிலை என அனைத்தையும் முகம் நேரடியாக சந்திக்கும். இதனால் பருக்கள் ஏற்படும்.
துரித உணவுகளை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. இவை உடலுக்குக் கேடு விளைவிப்பவை. இவை பருக்கள் வரவும் காரணமாக இருக்கின்றன.
பாலால் ஆன உணவுப் பொருட்கள் முகப்பருக்கள் பிரச்சனை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.
கார்போஹைட்ரேட்டை அளவுக்கு அதிகமாக நீங்கள் எடுத்துக்கொள்ளும்போது பருக்கள் வரும்.
சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகப்படியான எண்ணெயை சுரப்பதால், சருமத்துளைகள் அடைக்கப்பட்டு அதனால் பருக்கள் ஏற்படும்.