குதிகால் வெடிப்பு பிரச்சனையால் பலர் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சனை எந்த காரணத்தால் ஏற்படுகிறது தீர்வுகள் என்ன என்று பார்க்கலாம்.
வைட்டமின் பி3 மற்றும் சி
உடலில் வைட்டமின் பி3 மற்றும் சி குறைபாடு காரணமாக தோல் வெடிப்பு பிரச்சனை ஏற்படலாம்.
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்
உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் ஏற்றத்தாழ்வு காரணமாக கணுக்கால் வெடிப்பு இரத்தப்போக்கு போன்ற பிரச்சனை ஏற்படும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம் குறைபாடு
உடலில் ஒமேகா-3 கொழுப்பு அமில் குறைபாடு காரணமாக தோல் சேதப் பிரச்சனை ஏற்படலாம். இதன்காரணமாகவும் குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது. உடலில் உள்ள தாதுக்கள் குறைபாடும் இதற்கு காரணம்.
தைராய்டு ஹார்மோன் மற்றும் வைட்டமின் ஈ குறைபாடு
தைராய்டு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் வைட்டமின் ஈ குறைபாட்டாலும் தோல் தொடர்பான பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.