வைட்டமின் ஈ காப்ஸ்யூல் மூலம் ஏற்படும் தீமைகள்!

By Karthick M
26 Jan 2024, 02:17 IST

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

அழகை அதிகரிக்கும் குறிப்புகளில் பலரும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை அடிக்கடி பயன்படுத்துவார்கள். இதை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விரிவாக பார்க்கலாம்.

முகப்பரு ஏற்படலாம்

முகத்திற்கு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். இது சரும எண்ணெயை அதிகரிக்கிறது.

ஒவ்வாமை

அழகை அதிகரிக்க வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை அதிகம் பயன்படுத்தினால். தோல் அலர்ஜி, சொறி போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரும்.

உணர்திறன் வாய்ந்த தோல்

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை சருமத்தில் நேரடியாக பயன்படுத்தக் கூடாது. இது அதிக உணர்திறன் உடையதாக மாறும். வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை தடவியபின் முகத்தை கழுவ மறக்காதீர்கள்.

தோல் அழற்சி

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை அதிகமாக பயன்படுத்தினால், அது வாய் புண், தோல் வீக்கம் மற்றும் கண்களில் எரிச்சலை ஏற்படுத்தும்.

உலர் சருமம்

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை முகத்தில் அதிகமாக பயன்படுத்துவதால். சருமத்தின் இயற்கையான எண்ணெய் குறைந்து, சரும வறட்சி ஏற்படுகிறது. இது அரிப்பு மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்தலாம்.

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை எப்படி பயன்படுத்துவது?

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை முகத்தில் நேரடியாக தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவைகளுடன் கலந்து தடவவும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களை அதிகம் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே கவனமாக இருத்தல் அவசியம்.