பழ ஃபேஸ்மாஸ்க்
வீட்டிலேயே பளபளப்பான சருமத்தை பெற பழ ஃபேஸ்பேக் முகத்தில் போடலாம். இதற்கு எந்த பழங்கள் சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
பப்பாளி
பப்பாளி கூழில் சந்தன பொடி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 10 நிமிடங்கள் தடவவும். பின்னர் மசாஜ் செய்வது போல் சுத்தம் செய்யவும்.
வாழைப்பழம்
வாழைப்பழ பேஸ்டில் கற்றாழையை கலந்து முகத்தில் தடவவும். இதை முகத்தில் தடவி சிறிது காய்ந்ததும் சாதாரண நீரில் முகத்தை கழுவவும்.
மாதுளை
ஃப்ரீ ரேடிக்கல்களை போக்கவும், சருமம் இறுக்கமாகவும் மாற மாதுளை விதைகளை அரைத்து அதன் பேஸ்ட்டை முகத்தில் தடவவும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தோலை பொடி செய்து பால் மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்யவும். இதை முகத்தில் 15 நிமிடங்கள் தடவவும். இதன்பின் முகத்தை வெற்று நீரில் கழுவவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பழங்களும் ஃபேஸ்பேக்கிற்கு சிறந்தவையாகும். இருப்பினும் சருமத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கும்பட்சத்தில் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.