பருவ மழையிலும் பளீச்சென இருக்க... சருமத்திற்கு நெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க!
By Kanimozhi Pannerselvam
21 Oct 2024, 10:30 IST
கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெய்யை உதடுகளில் தடவினால் உதடு வெடிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
நெய்யில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சூரிய ஒளி, மாசு மற்றும் ரீ ரேடிக்கல் விளைவுகளிலிருந்து பாதுகாப்பதோடு, சருமத்தை மென்மையாக்குகிறது.
தினமும் இரவு தூங்கும் முன்பு, 2 துளிகள் நெய்யை கண்களுக்குக் கீழே தேய்த்து மசாஜ் செய்து வந்தால், கண்களின் பொலிவு அதிகரிக்கும் மற்றும் கண் வீக்கம் மற்றும் கருவளையங்கள் நீங்கும்.
நெய்யில் காபி, தேங்காய் எண்ணெய் மற்றும் உளுந்து மாவு ஆகியவற்றை கலந்து ஸ்க்ரப் செய்து வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்.
மழைக்கால சரும வறட்சியைத் தவிர்க்க, இரவில் தூங்கும் முன் இரண்டு சொட்டு நெய்யை முகம், கை மற்றும் உள்ளங்கைகளில் மசாஜ் செய்யவும்.
நெய்யில் ஏராளமான வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ உள்ளது. இது உச்சந்தலை வறட்சி, பொடுகு பிரச்சனை தீர்க்கும். தேங்காய் எண்ணெயுடன் சம அளவு நெய் கலந்து தலைமுடியில் தடவி 20 முதல் 25 நிமிடம் கழித்து இயற்கையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.