எண்ணெய் பசை நீங்க டிப்ஸ்
மோசமான உணவுப் பழக்கம், வானிலை மாற்றம் போன்ற காரணங்களால் சருமம் அதிக எண்ணெய் பசையாக மாறுகிறது. இதை சரிசெய்ய ரோஸ் வாட்டரை பயன்படுத்தலாம். எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
ரோஸ் வாட்டருடன் வெள்ளரி
வெள்ளரிக்காய் சாறுடன் ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் தடவினால் அதிகப்படியான எண்ணெய் பிரச்சனை நீங்கும். இது முகத்திற்கு பொலிவைத் தருகிறது.
இப்படி யூஸ் செய்யலாம்
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெள்ளரி சாறு மற்றும் 3 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரில் கழுவவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை
ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை கலவையானது கறைகள் மற்றும் எண்ணெய் பசையை அகற்ற உதவுகிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் 3 ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். இதை பருத்தி துணி உதவியுடன் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும்.
ரோஸ் வாட்டர் மற்றும் தேன்
தோஸ் வாட்டரில் தேன் கலந்து முகத்தில் தடவினால் எண்ணெய் பசை சரும பிரச்சனை நீங்கும். தேனில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் பண்புகள் கூடுதல் எண்ணெயை அகற்ற உதவுகிறது. இது முகத்தை பொலிவு பெற செய்யும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
எண்ணெய் பசை தோலில் இருந்து விடுபட ரோஸ் வாட்டரை இந்த வழிகளில் பயன்படுத்தலாம். ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.