தேவதையாய் ஜொலிக்க... கிரீன் டீயை மட்டும் இந்த மாதிரி முகத்துக்கு யூஸ் பண்ணி பாருங்க!

By Kanimozhi Pannerselvam
04 Feb 2024, 15:21 IST

கிரீன் டீ + தேன்

2 டேபிள் ஸ்பூன் காய்ச்சி வடிகப்பட்டப்பட்ட க்ரீன் டீயுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

கிரீன் டீ + அலோவேரா ஜெல்

1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீயுடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவவும். இந்த கலவையை வாரத்தில் இரண்டு முறை தடவி வந்தால், முகத்தில் உள்ள முகப்பருக்கள் மறையும்.

கிரீன் டீ ஸ்கிரப்

2 டேபிள் ஸ்பூன் கிரீன் டீ இலைகளை பொடி செய்து அத்துடன், ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேன் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இந்த எளிமையான ஸ்க்ரப் முகத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து அழுக்குகள், மாசுக்களை அகற்றுகிறது.

கிரீன் டீ + எலுமிச்சை

2 டேபிள் ஸ்பூன் கிரீன் டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவவும். சுமார் 20நிமிடங்கள் கழித்து இதனை கழுவினால், இயற்கையான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படும்.

கிரீன் டீ + முல்தானி மெட்டி

2 டேபிள் ஸ்பூன் கிரீன் டீயுடன் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து திக்கான பேஸ்ட் தயார் செய்யவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.