முக வீக்கத்தை குறைக்க சூப்பர் டிப்ஸ்.!

By Ishvarya Gurumurthy G
27 Dec 2023, 11:28 IST

உங்கள் முகத்தில் உள்ள வீக்கத்தை எளிதாக நீக்க, சூப்பர் டிப்ஸ் உள்ளது. இதை பற்றி தெரிந்துக்கொள்ள பதிவை தொடர்ந்து படிக்கவும்.

உப்பு

அதிக உப்பு சாப்பிடுவதால் உடலில் வீக்கம் ஏற்படுகிறது. இதைப் போக்க, உங்கள் அன்றாட வழக்கத்தில் உப்பின் அளவைக் குறைக்கவும்.

ஹீட்டிங் பேட்

உடலில் வீக்கம் ஏற்பட்டால் ஹீட்டிங் பேட் பயன்படுத்துங்கள். வீக்கத்தை அகற்ற இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தண்ணீர் குடிக்கவும்

நீரிழப்பு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அப்படி ஒரு நிலை உடலில் ஏற்பட்டால், நீரின் அளவை அதிகரிக்கவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் இந்தப் பிரச்னையை எளிதில் தீர்க்கலாம்.

மதுவை தவிர்க்கவும்

மது அருந்தும் பழக்கம் இருந்தால், இந்த பழக்கத்தை தவிர்க்கவும். ஆல்கஹால் உடலில் வீக்கம் மற்றும் ஒவ்வாமை பிரச்னையை அதிகரிக்கிறது.

மேக்கப்பை நீக்கிவிட்டு தூங்குங்கள்

சில சமயங்களில் மேக்கப்புடன் தூங்கும் பழக்கமும் முகம் வீக்கத்தை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, இரவில் தூங்கும் முன் முகத்தில் மேக்கப்பை அகற்றவும்.

ஆரோக்கியமான உணவு வேண்டும்

உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதிலும் உணவுக் கட்டுப்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. வீக்கம் ஏற்பட்டால், குறைந்த காரமான உணவு, குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த உப்பு பயன்படுத்தவும்.

உருளைக்கிழங்கு

முகத்தில் வீக்கம் ஏற்பட்டால் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தலாம். இதற்கு உருளைக்கிழங்கை நறுக்கி முகத்தில் தடவவும்.